யாரை நோவது? Whom Do I Blame?

யாரை நோவது?
Whom Do I Blame?
யாரை நோவது?

என் வியர்வையை உருக்கி
நான் வாங்கித் தந்த ஆடைகளை அணிந்து கொண்டு,
உன் நண்பர்களோடு வீதியில்
சிரித்து மகிழ்ந்து வலம் வருகிறாய்…
 
உன் மிடுக்கை அவர்கள் புகழும்போது
உனக்குள் பூக்கும் பெருமிதத்தில்,
இதை வாங்க நான் பட்ட அவமானங்களும்,
தேய்ந்த என் பாதங்களும்
உனக்குத் தெரியவே இல்லை!
 
என்னிடம் செல்வம் கொட்டிக் கிடப்பதாய்
மிக எளிதாய் நினைத்துக்கொண்டாய்;
என் பசியைக் கொன்று
உனக்களித்த பரிசு அதுவென்று
நீ அறிய மறுத்தாய்.
ஒரு சின்ன அங்கீகாரமோ,
கனிவான ஒரு பார்வையோ
உன் விழிகளில் இருக்கவில்லை.
 
நான் உனக்களித்த
என் உயிரையே
தோளில் சாதாரணமாகப் போட்டுக்கொண்டு,
என்னை அலட்சியமாய்க்
கடந்து சென்றாய்.
என் தூக்கத்தைத் தொலைத்து
நான் ஓடிய ஓட்டமெல்லாம்
உன் ஆடம்பரத்திற்காகத்தான்…
 
ஆனால், நீயோ
நான் தந்ததெல்லாம்
என் மிச்சமீதி என
ஒரு கர்வம் கொண்டாய்!
உனக்காக நான்
மெழுகாய் எரிந்த போது,
அந்த வெளிச்சத்தில்
நீ அழகாய் மிளிர்ந்தாய்…
நான் சாம்பலாவதை
திரும்பிப் பார்க்கக் கூட
உனக்கு நேரமில்லை!
 
உன் அற்ப சந்தோஷத்திற்காக
என்னை நானே அழித்துக்கொண்டேனே…
என் தியாகங்களை
ஒரு பகட்டாக அணிந்துகொண்டு,
நண்பர்களோடு சிரித்து நகரும்
உன்னை நோவதா?
இல்லை…
என் ரணங்களை மறைத்து,
நீ சந்தோஷமாக இருந்தால் போதுமென்று
இன்னும் துடிக்கும்
என் முட்டாள் காதலை நோவதா?
 
உறவின் பெயரில்
வஞ்சிக்கப்பட்டது நானா?
இல்லை…
என் உழைப்பா?
விடை தெரியாமல் தவிக்கிறேன்…
இதில் நான் யாரை நோவது?

Whom Do I Blame?
 
Whom do I blame?
Woven from the very sweat of my brow,
are the clothes that drape you today.
You walk the streets, laughing with friends,
basking in their shallow praise.
As pride swells within your chest,
you remain blind to the humiliations I swallowed,
and the soles of my feet, worn to the bone.
 
You chose the easy assumption—that I overflowed with gold.
You refused to see that the gift you wore
was born from the murder of my own hunger.
No glance of grace, no tender warmth
ever found a home in your eyes.
You threw my very life over your shoulder like a casual cloak,
and walked past me with indifferent strides.
 
I chased endless nights and slaughtered my sleep,
only to fuel your luxury.
Yet, you wore it with arrogant ease,
believing my ultimate sacrifice was just my leftover change.
I burned myself down like a quiet candle,
so you could stand radiant in the glow.
But as I crumbled into ash,
you didn’t even have the time to look back.
 
For your fleeting joy, I dismantled my existence.
So tell me, who do I blame?
Do I blame you—who wears my scars like a fashion statement,
giggling through the passing crowds?
Or do I blame my own foolish, stubborn love,
which hides its deep wounds and still beats,
praying only for your happiness?
 
Was it I who was betrayed in the name of devotion?
Or was it the sacred sweat of my labor?
Drowning in questions that offer no peace,
I ask the empty air…
 
Whom do I truly blame?
 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *