Latest posts
-
மௌனத்தின் அதிகாரம் The Roar of Stillness

உன் குருதி கசிந்த காயங்களில்வஞ்சினம் பூசாதே.பழிவாங்கும் சிறுமைஉன் உன்னத ஆத்மாவிற்குஅழகல்ல.எரியும் தணலைமடியில் சுமந்து,உன்னை நீயேபொசுக்காதே.உன் மௌனம் என்பதுபலவீனம் அல்ல…அது,பிரபஞ்சத்திடம்நீ தரும் அதிகாரம்.ஒரு அடி பின்வாங்கு…இது உலகத்திற்காக அல்ல,உனக்காக.உன் சிதறிய வாழ்வின் துகள்களைமெல்லச் சேகரி.உன் மீது மட்டும்உன் பார்வையைத் திருப்பு.அவர்கள் செய்த துரோகமும்,அவர்கள் கொடுத்த ரணமும்—அவற்றின் கணக்கைஅந்தப் பிரபஞ்சம்பார்த்துக்கொள்ளும்.அவர்கள் எங்கேசிதைய வேண்டுமோ,அங்கே விதிஅவர்களைச் சிதைக்கும்.உன் இதயத்தில் இன்றுரத்தம் கசியும்அந்த ஆழமான வடு,காலத்தின் கரங்கள்படப் பட…மெல்லத் தழும்பாக மாறும்.ஒரு நாள்,அந்தத் தழும்பும்இருந்த இடம் தெரியாமல்மறைந்து போகும்.அன்று,நீ உனக்கான அமைதியைத் தொடுவாய்.மறைந்து
-
எனக்கு ராவணன் போதும் I Prefer the Demon King

முதலில்,”தோழமை” என்றான்—என் தயக்கங்களைஉடைத்தான்.பின்,”காதல்” என்றான்—என் தனிமையைக்கலக்கினான்.உயிரே அவன் எனநான் உருகிய வேளையில்…என் இதயத்தை”ஆராய்ச்சி” செய்யத் தொடங்கினான்.பரீட்சை எழுதிப் பெறநான் என்ன பட்டமாவாங்க வந்தேன்?நான் கடந்து வந்தவலிகளை விட,அவன் வைத்த”தகுதித் தேர்வுகள்”என்னைஅதிகம் ரணமாக்குகின்றன.வென்ற பின்னும்ஏனோ அவனுக்குஆயிரம் தயக்கங்கள்.ஊர் சிரிக்கும் என்றுதன் முகமூடியைக் காக்க,என் உணர்வுகளைக்குப்பையாய் வீசத் துணிகிறான்.புனிதன் என்ற போர்வையில்என் முதுகில் குத்தும்இந்த வேடதாரி ராமன்எனக்கு வேண்டாம்.தன் போலி பிம்பத்தைக்காத்துக்கொள்ள,என்னைப் பலியாக்கும்இந்த ராமன்எனக்கு வேண்டவே வேண்டாம்.நிச்சயம்…எனக்குராவணன் போதும்.தங்கையின் மூக்கு அறுபட்டபோது,தர்மம் பேசாமல்,திக்கெட்டும் போர் தொடுத்தானே—அந்தப் பாசக்காரன் போதும்.அழகின் சிலையாய்அருகே
