மௌனத்தின் அதிகாரம் The Roar of Stillness

மௌனத்தின் அதிகாரம் The Roar of Stillness

உன் குருதி கசிந்த காயங்களில்
வஞ்சினம் பூசாதே.

பழிவாங்கும் சிறுமை
உன் உன்னத ஆத்மாவிற்கு
அழகல்ல.

எரியும் தணலை
மடியில் சுமந்து,
உன்னை நீயே
பொசுக்காதே.

உன் மௌனம் என்பது
பலவீனம் அல்ல...
அது,
பிரபஞ்சத்திடம்
நீ தரும் அதிகாரம்.

ஒரு அடி பின்வாங்கு...
இது உலகத்திற்காக அல்ல,
உனக்காக.

உன் சிதறிய வாழ்வின் துகள்களை
மெல்லச் சேகரி.

உன் மீது மட்டும்
உன் பார்வையைத் திருப்பு.

அவர்கள் செய்த துரோகமும்,
அவர்கள் கொடுத்த ரணமும்—
அவற்றின் கணக்கை
அந்தப் பிரபஞ்சம்
பார்த்துக்கொள்ளும்.

அவர்கள் எங்கே
சிதைய வேண்டுமோ,
அங்கே விதி
அவர்களைச் சிதைக்கும்.

உன் இதயத்தில் இன்று
ரத்தம் கசியும்
அந்த ஆழமான வடு,
காலத்தின் கரங்கள்
படப் பட...
மெல்லத் தழும்பாக மாறும்.

ஒரு நாள்,
அந்தத் தழும்பும்
இருந்த இடம் தெரியாமல்
மறைந்து போகும்.

அன்று,
நீ உனக்கான அமைதியைத் தொடுவாய்.

மறைந்து போன
உன் புன்னகை,
உன் உதடுகளில்
மீண்டும் பூக்கும்.

நீ சிந்திய
ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும்
ஒரு சாட்சியாய் மாறும்.

உன் இதயத்தின் ஓசை
அண்டவெளியில்
நீதிக்காகக் கத்தியழும்.

அவர்களுக்கு
உன் வலி புரியாது.
ஏனெனில்,
அவர்களின் மொழி வேறு.

ஆனால்,
கவலைப்படாதே...
அவர்கள் எதை
உயிர் என நினைக்கிறார்களோ,
அவர்கள் எதை
புதையலெனக் காக்கிறார்களோ—
அங்கேதான்
காலத்தின் சவுக்கடி
மிகக் கொடியதாய் விழும்.

அவர்களுக்காக
எதையும் செய்யாதே.
உனக்காக மட்டும் வாழ்.

துரோகங்கள் தந்த
பாரத்தை உதறிவிட்டு,
நிசப்தமான
ஒரு அமைதியில்
உன் ஆன்மாவை
ஆற்றுப்படுத்து.

நீ தேடும்
அந்தப் பெருவெளி அமைதி...
நிச்சயம்
உனக்குக் கிடைக்கும்.
Do not paint your bleeding wounds
with the poison of vengeance.

The pettiness of revenge
does not suit
your noble soul.

Do not cradle
burning embers in your lap,
only to scorch
your own spirit.

Your silence
is not weakness.
It is the supreme authority
you hand over
to the cosmos.

Take a step back—
not for the world,
but for yourself.

Slowly gather
the scattered fragments
of your shattered life.

Turn your gaze inward.
Let it rest
upon yourself alone.

The betrayals they committed,
the agony they inflicted—
the universe
will settle those accounts.

Wherever they are destined
to crumble,
fate will find them there.
And fate
will do its work.

The deep wound
that bleeds within your heart today
will soften,
little by little,
beneath the gentle hands of time.

One day,
even that scar
will fade,
leaving no trace behind.

And on that day,
you will finally touch
the peace
that was always meant for you.

The smile
you thought was lost forever
will bloom again
upon your lips.

Every tear
you have shed
will stand
as a silent witness.

And the quiet ache
of your heart
will echo through the cosmos,
crying out for justice.

They will never understand
your pain.
They speak
a different language.
But do not worry.

Whatever they cherish
as their very life,
whatever treasure
they guard most fiercely,
is exactly where
the merciless whip of time
will strike the hardest.

Do nothing for them anymore.
Live only
for yourself.

Shake off
the weight
of their betrayals.

Lay down
the burdens
you were never meant to carry.

And in the sanctuary
of absolute silence,
allow your soul
to heal.

The vast,
boundless peace
you have been searching for—
will surely
find its way
to you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *