எனக்கு ராவணன் போதும் I Prefer the Demon King

எனக்கு ராவணன் போதும்
I Prefer the Demon King
முதலில்,

"தோழமை" என்றான்—

என் தயக்கங்களை
உடைத்தான்.

பின்,

"காதல்" என்றான்—
என் தனிமையைக்
கலக்கினான்.

உயிரே அவன் என
நான் உருகிய வேளையில்...
என் இதயத்தை
"ஆராய்ச்சி" செய்யத் தொடங்கினான்.

பரீட்சை எழுதிப் பெற
நான் என்ன பட்டமா
வாங்க வந்தேன்?

நான் கடந்து வந்த
வலிகளை விட,
அவன் வைத்த
"தகுதித் தேர்வுகள்"
என்னை
அதிகம் ரணமாக்குகின்றன.

வென்ற பின்னும்
ஏனோ அவனுக்கு
ஆயிரம் தயக்கங்கள்.

ஊர் சிரிக்கும் என்று
தன் முகமூடியைக் காக்க,
என் உணர்வுகளைக்
குப்பையாய் வீசத் துணிகிறான்.

புனிதன் என்ற போர்வையில்
என் முதுகில் குத்தும்
இந்த வேடதாரி ராமன்
எனக்கு வேண்டாம்.

தன் போலி பிம்பத்தைக்
காத்துக்கொள்ள,
என்னைப் பலியாக்கும்
இந்த ராமன்
எனக்கு வேண்டவே வேண்டாம்.

நிச்சயம்...
எனக்கு
ராவணன் போதும்.

தங்கையின் மூக்கு அறுபட்டபோது,
தர்மம் பேசாமல்,
திக்கெட்டும் போர் தொடுத்தானே—
அந்தப் பாசக்காரன் போதும்.

அழகின் சிலையாய்
அருகே இருந்தும்,
அவள் அனுமதி இன்றி
ஒரு சுண்டு விரல் கூடத் தீண்டாத
அந்த அசுரனின்
ஒழுக்கம் போதும் எனக்கு.

காதல் என்ற பெயரில்
உயிரைக் குடிப்பதை விட,
பகைவனாகவே இருந்து
உயிரை எடுக்கும்
அந்தப் பத்துத் தலை வேந்தனின்
மரணமே மேலானது.

முதுகில் குத்தும்
புனிதர்களை விட,
முன்னால் நின்று
போர் புரியும்
அரக்கனே மேல்.

நீதி சொல்லும்
ராமனின் நாடகத்தை விட...
நிச்சயம்,
என் மன்னன்
ராவணனின் மரணமே மேலானது.

ஏனெனில்,
வஞ்சகத்தின் பின்னால்
மறைந்து வாழ்வதை விட,
உண்மையின் முன்னால்
வீழ்ந்து இறப்பது
ஆயிரம் மடங்கு உயர்ந்தது.

அதனால்தான்—
எனக்கு ராவணன் போதும்.
First,
he whispered "friendship"—
and shattered
all my reservations.

Then,
he spoke of "love"—
and stirred the still waters
of my loneliness.

But the moment
I melted,
crowning him
as my very life...
he began
a cold, relentless
analysis
of my bleeding heart.

Tell me—
did I come here
to earn a degree,
to sit for his endless examinations?

The wounds
left by his
qualifying tests
cut far deeper
than all the pain
I have ever survived.

And even when I pass,
a thousand hesitations
still haunt him.

Terrified
of the laughter of the crowd,
desperate
to preserve his mask,
he prefers
to throw away
my deepest emotions
like worthless trash.

I want no part
of this Rama—
this saintly figure
who drives a knife
into my back
while wrapped
in the robes of virtue.

I refuse
the Rama
who sacrifices me
at the altar
of his carefully crafted image.

Let me have Ravana instead.
He is more than enough.

When his sister
was humiliated and mutilated,
he did not hide
behind sermons
of righteousness.

He answered
with war.
That fierce loyalty,
that uncompromising love,
is enough for me.

And though
a woman of extraordinary beauty
stood within his reach,
he never crossed
the boundaries
of her consent.

The integrity
of that so-called demon
is enough for me.

Rather than having
my soul slowly drained
in the name of love,
I would choose
the open wrath
of the ten-headed king.

For there is more honor
in a foe
who stands before you
with his sword drawn,
than in a saint
who wounds you
from behind.

Better the demon
who declares war openly,
than the holy man
who disguises betrayal
as virtue.

And greater
than the carefully rehearsed drama
of a righteous Rama,
is the tragic fall
of my true king—
Ravana.

Because I would rather
be destroyed
by an honest enemy
than be sacrificed
by a dishonest savior.

And that is why—
I prefer the Demon King.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *