நான் ஒரு மூடிய புத்தகம்… I Am a Closed Book

நான் ஒரு மூடிய புத்தகம்…

I Am a Closed Book
நான் ஒரு மூடிய புத்தகம்...

படிக்கத் தெரிந்தால்
நான் உனக்கு வேதம்.

பிழைக்கத் தெரியாவிட்டால்
நானே உன் மரணம்.

உன் காயங்களுக்கு
நான் பனித்துளி.

ஆனால்,

உன் துரோகங்களுக்கு
நான் பெருமழை.

என் மென்மையில்
நீ ஊஞ்சல் ஆடலாம்.

ஆனால்,

என் வன்முறை
உன்னைச் சுவடு தெரியாமல் அழிக்கும்.

நான் ஒரு சிலையல்ல...

நான் செதுக்கப்படாத
பாறை.

என் மௌனம்
ஒரு தியானம்.

ஆனால்,

அதன் ஆழத்தில்

ஒரு சுனாமி
உறங்குகிறது.

கோவிலின் கருவறை வாசனை
என்னிடம் உண்டு.

அதேபோல்,

சுடுகாட்டின் சாம்பல் வாசனையும்
என்னிடம் உண்டு.

நான் உனக்காக விரிக்கும்
சிறகுகள்,

சில நேரம்

உன்னைச் சிறை வைக்கும்
கூண்டாகவும் மாறும்.

பூவின் மென்மையை
என்னிடம் தேடாதே.

நான்,

முட்களைக் காப்பரணாகக் கொண்ட
ரோஜா.

உன் தாகம் தீர்க்கும்
கங்கை நான்.

உன்னை அடியோடு மூழ்கடிக்கும்
பிரளயமும் நான்.

என் சிரிப்பில்
தேவதையின் ஆலாவட்டம்.
என் கோபத்தில்
காலனின் ருத்ரதாண்டவம்.

வலது கையில்
அமுதக் கிண்ணம்.
இடது கையில்
ஆலகால விஷம்.

இவை இரண்டிற்கும் இடையில்
ஊசலாடும்
ஒரு மாயை நான்.

நீ எதைப் பருகப்போகிறாய் என்பது
உன் கைகளில் அல்ல...
என் கண்கள் காட்டும்
பார்வையில் இருக்கிறது.

மாலையில்
நான் மல்லிகை.
மின்னல் வெட்டினால்
நான் எரிமலை.

என்னை
ஒரு பக்கமாக மட்டும்
அளந்துவிடாதே.

நான் ஒரு கண்ணாடி...
என்னை நீ
மென்மையாகத் தொட்டால்,
உன் பிம்பம் தெரிவேன்.
என்னை நீ
உடைக்க நினைத்தால்,
உன்னையே கீறும்
துண்டுகளாவேன்.

என்னை
ஒரு கரையில்
நிறுத்திவிடாதே.

நான்
அலைகளாகவும் இருப்பேன்.
ஆழமாகவும் இருப்பேன்.

இந்த இரு துருவங்களுக்கு இடையில் தான்—
நான் எனக்கான
அரியாசனத்தை
அமைத்திருக்கிறேன்.

என் ஒளியைக் காதலிக்க
உனக்குத் தகுதியிருந்தால்,
என் இருளையும்
ஆராதிக்கப் பழகிக்கொள்.

ஏனெனில்,
நான் ஒரு பக்கக் கதை அல்ல...
ஒளியும் நானே.
இருளும் நானே.
அவற்றிற்கிடையில்
தன்னைத் தானே உருவாக்கிக்கொண்ட
ஒரு முழுமையான பிரபஞ்சம் நான்.
I am a closed book.
If you know how to decipher me,
I am holy scripture;

If you lose your way,
I am your ultimate demise.

To your wounds,
I am a tender dewdrop,
But to your betrayals,
I am a torrential storm.

You may sway gently in my softness,
But my fury will erase your every footprint.
I am no sculpted idol—
I am an unyielding, uncarved rock.

My silence is a deep meditation,
But a tsunami slumbers in its depths.

I bear the sacred incense
of the temple's inner sanctum,
And the heavy ash
of the burning grounds.

The wings I unfold to shield you
Can easily become the cage
that confines you.

Do not seek the fragile softness
of a blossom here;
I am a rose protected
by a fortress of thorns.

I am the life-giving river
that quenches your thirst,
And the apocalyptic deluge
that swallows you whole.

In my laughter
blooms the blessing of an angel,
In my rage
echoes the cosmic dance of death.

A bowl of divine nectar
in my right hand,
A vial of fatal poison
in my left.

I am a shifting illusion,
suspended between the two.

Which one you drink
is never your choice—
It is written in the gaze
of my eyes.

By twilight,
I am sweet-scented jasmine;
When lightning strikes,
I am a roaring volcano.

Do not dare to measure me
by a single side.

I am a mirror...
Handle me gently,
and I will show you your beauty.

Try to break me,
and I become shards
that bleed you dry.

Do not try to anchor me
to one safe shore;

I am both
the crashing wave
and the quiet abyss.

It is precisely
between these two extremes
That I have carved
my sovereign throne.

If you possess the grace
to love my light,

You must learn to
worship my darkness too.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *